×

சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் பறிமுதல் : முதியவர் உள்பட 2 பேர் கைது

சென்னை, டிச. 21: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு தாய் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. சுங்க அதிகாரிகள் பயணிகளை சோதனையிட்டபோது ராமநாதபுரம் மாவட்டம், இளையாங்குடியை சேர்ந்த முஜ்பூர் ரகுமான் (22), அப்துல் வகாப் (68) சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று திரும்பினர். அவர்களிடம் இருந்த 6 அட்டை பெட்டிகளை பிரித்து பார்த்தபோது அதில் ₹10 லட்சம் மதிப்பிலான 4800 சிகப்பு காது நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருப்பது தெரிந்தது. ஆவணங்களை பார்த்தபோது போலி என்பது தெரிந்தது. எனவே ஆமைகளை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர். தகவலறிந்து பெசன்ட்நகர் வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் விமான நிலையம் சென்று ஆய்வு செய்து, ‘‘சிவப்பு காது நட்சத்திர ஆமைகளை இந்தியாவில் அனுமதிக்க முடியாது. இது தடை செய்யப்பட்ட உயிரினம். இதை அனுமதித்தால், நீர்நிலைகள் பாதிக்கப்படும்.

எனவே இந்த ஆமைகள், எந்த நாட்டில் இருந்து வந்ததோ, அங்கேயே திருப்பி அனுப்பும்படி கூறினர். மேலும் ஆமைகளை கடத்தி வந்த 2 பேரிடமும் திரும்ப அனுப்புவதற்கான செலவு ₹2 லட்சத்தை அபராதமாக பெற வேண்டும்’’ என்றனர்.இதையடுத்து அந்த ஆமைகள் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லும் விமானத்தில் அனுப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  மேலும், கைதான இருவரிடமும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...