×

ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து நிலஅளவையர்கள் போராட்டம்

மதுரை, டிச. 21: பட்டா மாறுதலில் உட்பிரிவை நில அளவை துறையினர் கூராய்வு செய்த பின்னரே பட்டா வழங்கப்படுகிறது. இதில் இடத்தின் அளவு ஆகியவற்றை அளக்கும் உரிமை நில அளவையர்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த நடைமுறையை விஏஓக்களுக்கு மாற்றி அரசு கொடுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் நில அளவை துறையினர் நேற்று ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 23 சார்பு அளவையர்கள். 11 தலைமை தாலுகா அளவையர்கள். 63 குறு வட்ட அளவையர்கள் கலந்து கொண்டனர். இதன்தொடர்ச்சியாக தமிழ்நாடு நில அளவை அலுவலரின் ஒன்றிப்பு சங்கம் சார்பில், பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சசிதரன் தலைமை வகிக்க பொருளாளர் ரகுபதி, மாநில துணை தலைவர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதுகுறித்து நில அளவையர் சங்க மாவட்ட பொருளாளர் ரகுபதி கூறும்போது, ‘‘நிலத்தை அளவீடு செய்து பத்திரப்பதிவில் உள்ளபடி வரைபடம் தயாரித்து, அளவீடு செய்யும் பணியை நாங்கள் மட்டுமே செய்ய முடியும். இதில் மற்று துறையினர் நிலம் தொடர்பான கூராய்வு செய்ய முடியாது. அந்த பணியை வேறுதுறைக்கு அரசு மாற்றி கொடுக்கக்கூடாது. எங்களது கோரிக்கைளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் 27ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.


Tags : Landlords ,
× RELATED வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க...