×

தற்கொலை தடுத்தல் தொடர்பாக நூற்பாலைகளின் விடுதி காப்பாளர்களுக்கு பயிற்சி

கோவை, டிச. 21: கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், கரூர், சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் சுமார் 4 ஆயிரம் மில்கள் உள்ளன. இந்த மில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக 2,500 விடுதிகள் உள்ளன. நுாற்பாலைகளில் மட்டும் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், கடந்த 4 ஆண்டுகளில் பணி சுமை, குடும்ப சூழ்நிலை காரணமாக 106 ஊழியர்கள் தற்கொலை செய்துள்ளனர். நடப்பாண்டில் மட்டும் இதுவரை 7 பேர் தற்ெகாலை செய்துள்ளனர்.   இதனால், மில்களில் தற்கொலையை தடுக்கவும், மனநல பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மில்களில் உள்ள பெண் ஊழியர்களுக்கு பயிற்சி, அவர்களை கண்காணிக்க விடுதி காப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் நேற்று கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் ரீடு நிறுவனம் இணைந்து நூற்பாலைகள் மற்றும் ஆயுத்த ஆடை நிறுவனங்களின் விடுதி காப்பாளர், தொழிலாளர் நல அலுவலர்களுக்கு தற்ெகாலைகளை கண்டறிதல், தடுத்தல் பயிற்சி வழங்கினர்.
 இதில், கோவை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கூடுதல் இயக்குனர் ஜெகதீசன் பங்கேற்றார். இணை இயக்குனர்கள் செந்தில்குமார், வேணுகோபால் மற்றும் ரீடு நிறுவன இயக்குனர் கருப்புசாமி,  மேலாளர் மகேஷ்வரன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். மேலும், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 60 நூற்பாலைகளின் விடுதி காப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் நல அலுவலர்கள் கலந்துகொண்டனர்.   இவர்களுக்கு, தனியாக உள்ள பெண் தொழிலாளர்களை கண்காணிக்க வேண்டும். மனநல ஆலோசனை வழங்க வேண்டும். இது போன்ற செயல்கள் காரணமாக தற்கொலைகளில் ஈடுபடுவதை தடுக்க முடியும் என அறிவுறுத்தினர்.




Tags : residents ,spinning resorts ,
× RELATED வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம்...