இளங்கோவன் பிறந்தநாள் விழா ஈரோட்டில் இன்று நடக்கிறது

ஈரோடு, டிச.21:  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் பிறந்தநாள் விழா ஈரோட்டில் இன்று கொண்டாடப்படவுள்ளது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் 21ம்தேதி (இன்று) காலை 9மணிக்கு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடக்கிறது.  தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி தலைமை தாங்குகிறார். மாவட்ட தலைவர்கள் ரவி, சரவணன், கிருஷ்ணன், கோபி, தென்னரசு, மக்கள்ராஜன், திமுக மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

 மாநில துணை தலைவர் நல்லசாமி வரவேற்கிறார். இதில் தேசிய செயலாளர் சஞ்சய்தத், திமுக மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மாவட்ட செயலாளர் முத்துசாமி, முன்னாள் எம்.பி.,பீட்டர்அல்போன்ஸ், மாநில பொருளாளர் ராமச்சந்திரன், மாநில விவசாய அணி தலைவர் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் துரைரவிக்குமார், மதிமுக மாநில பொருளாளர் கணேசமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ.,செல்வபெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இறுதியாக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஏற்புரையாற்றுகிறார். மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறுகிறார்.

Tags : Ilangovan ,birthday party ,Erode ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை