×

கோவை சரக டிஐஜி ஈரோட்டில் ஆய்வு

ஈரோடு, டிச. 21: ஈரோட்டில் கோவை சரக டிஐஜி வருடாந்திர ஆய்வு  பணியில் நேற்று ஈடுபட்டார்.  ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை பிரிவில் கோவை சரக டிஐஜி கார்த்திகேயன் வருடாந்திர ஆய்வு பணியில் நேற்று ஈடுபட்டார்.  அப்போது அவர், ஆயுதப்படை பிரிவின் பதிவேடுகள், கோப்புகள், ஆயுதங்கள் வைப்பறை,  உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் போலீ்சாருக்கு வழங்கப்பட்ட அனைத்து ரக வாகனங்கள் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொள்ள வழங்கப்பட்ட டூவீலர்கள் வரை ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.  இந்த வாகனங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என  டிஐஜி கார்த்திகேயன் வாகன தணிக்கை மேற்கொண்டார்.

 இதனையடுத்து  ஆயுதப்படை மைதானத்தில் திறந்த ஜீப்பில், எஸ்பி சக்தி கணேசனுடன்  சென்ற, டிஐஜி கார்த்திகேயன் ஆயுதப்படை பிரிவு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  முன்னதாக டிஐஜி கார்த்திகேயன் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடிக்க கோரியும் அறிவுரை வழங்கினார். மேலும் எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்று வரும் கட்டிட பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார்.

Tags : Digi ,Coimbatore ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை