×

கறம்பக்குடி பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கல்

கறம்பக்குடி, டிச.20:   கறம்பகுடி தாலுக்காவில் உள்ள பல்வேறு பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 வகையான நிவாராண பொருட்களை தாலுகா அலுவலர்கள் வழங்கி வருகின்றனர். இதன் அடிப்படையில் கறம்பகுடி மற்றும் மழையூர் சரகத்திற்குடப்பட்ட திருப்பக்கோவில் செங்கமேடு, பாப்பாப்பட்டி, கல்லுமடை, கீராத்தூர், தட்டாமனைபட்டி மற்றும் மழையூர் பகுதிகளான அதிராணவிடுத்தி, ஆயிப்பட்டி, கருப்படிப்பட்டி, எம்.தெற்குத்தெரு, தீதானிப்பட்டி, வெள்ளாளவிடுத்தி, குரும்பிவயல், கருகீழத்தெரு, இலைகடி விடுதி, திருமணஞ்சேரி, கருதெற்கு தெரு போன்ற பகுதிகளில் தாசில்தார் சக்திவேலு தலைமையில் ஆர்ஐக்கள் ராமகிருஷ்ணன், சசிகுமார் மற்றும்  கிராம உதவியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்களை வழங்கினர்.

Tags : area ,Karambukudi ,
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...