×

ஒட்டன்சத்திரம் பகுதியில் கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம்

ஒட்டன்சத்திரம், டிச. 20: ஒட்டன்சத்திரம் பகுதியில் கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான வீரலப்பட்டி, வேலூர்-அன்னப்பட்டி, சிந்தலவாடம்பட்டி, தா.புதுக்கோட்டை, பெரியக்கோட்டை மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, தேவத்தூர், கொத்தயம், கள்ளிமந்தையம் ஊராட்சிகளிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த பல வருடங்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் பகுதியில் பால் உற்பத்தி மற்றும் விவசாய பணிகளுக்காக வெளிநாட்டு ரக மாடுகளை வளர்த்து வந்தனர். இவ்வகை மாடுகள் அதிகளவு பால் உற்பத்தியைக் கொடுத்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் விரைவிலேயே நோய்வாய்ப்பட்டன. இதனைத்தொடர்ந்து தற்போது விவசாயிகள் காங்கேயம், செவலை ரக காளை மற்றும் கறவை மாடுகளை, விவசாயம் மற்றும் பால் உற்பத்திக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவைகளுக்கு இயல்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால், இவ்வகை மாடுகளை வாங்கி வளர்ப்பதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : area ,Ottnancur ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது