×

மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் சர் ஐசக் நியூட்டன் கலை அறிவியல் கல்லூரி சிறப்பிடம்

நாகை, டிச.20: நாகை பாப்பாக்கோவிலில் இயங்கி வரும் சர் ஐசக் நியூட்டன் கலை அறிவியல் கல்லூரியில் பயின்று வரும் முதலாமாண்டு கணிதவியல் துறை மாணவி  பவித்ரா, நேரு யுவகேந்திரா சார்பில் நாகை மாவட்ட அளவில் அனைத்து கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற இளையோர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்.
இதில் தேசப்பற்றும் தேசிய வளர்ச்சியும் என்ற ஆங்கில தலைப்பில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று முதல் ரூ.5ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றார். பாராட்டு விழாவில் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆனந்த் மாணவியை பாராட்டி கேடயம் வழங்கினார். நிகழ்ச்சியில் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நிறைமதி, நிர்வாக அலுவலர் குமார், அனைத்துக் கல்லூரி முதல்வர்கள், கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : Isaac Newton Arts Science College ,
× RELATED குத்தாலம் அருகே மருத்தூரில் மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா