×

திடப்பொருள் கழிவுகளால் பாதாள சாக்கடையில் அடைப்பு நிரந்தர தீர்வு காண மக்கள் கோரிக்கை

கரூர்,டிச.20: கரூர் நகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடையில் திடப்பொருள் கழிவுகள் கலக்கப்படுவதால் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகரப்பகுதி முழுதும் பாதாள சாக்கடை திட்டம் செயல் பாட்டில் இருந்து வருகிறது. இதில், கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் இருந்து ஆஸ்பத்திரி சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. கழிவு நீர் வெளியேறுவதும், இதனை நகராட்சியினர் அவ்வப் போது வந்து சுத்தம் செய்து விட்டு செல்வதுமான சம்பவம் இந்த பகுதியில் தொடர்ச்சியாக நடை பெற்று வருகிறது. தினமும் காலை நேரங்களில் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதும், பின்னர், 10மணியளவில் பணியாளர்கள் அதற்கான வாகனத்தில் வந்து சுத்தம் செய்வதும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக சாலையை கடந்து சென்றாலே கடும் துர்நாற்றம் வீசும் நிலை நிலவி வருகிறது.

ஜவஹர் பஜார் பகுதியை சுற்றிலும் நுாற்றுக்கணக்கான வணிக, வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. கழிவுநீர் மட்டுமே பாதாள சாக்கடையில் விடப்பட வேண்டும். ஆனால், சில நிறுவனத்தினர், சுத்தகரிப்பு செய்யாமல் திடப் பொருட்களையும் சாக்கடையில் கலக்க விட்டு விடுவதால்தான் அடைப்பு ஏற்பட்டு குறிப்பிட்ட பகுதி களில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி வருகிறது என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. எனவே, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுத்தும் வகையில் கழிவுப் பொருட் களை கலப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இது போன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர் பார்க்கின்றனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு