×

வர்தா புயலில் சேதமானது வாகன ஓட்டிகளை மிரட்டும் மின்கம்பங்கள்

திருவள்ளூர், டிச. 20:  திருவள்ளூர் அடுத்த காக்களூர் இந்தியன் வங்கி நகர் பகுதியில், 30 அடி சாலையில் 15 அடி சாலையை ஆக்கிரமித்து மின்கம்பங்கள் உள்ளன. வர்தா புயலில் சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் அறுந்துவிழுந்த ஒயர்களும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் இந்தியன் வங்கி நகர் அருகே கிழக்கு குளக்கரை சாலை வழியாக, ஊத்துக்கோட்டைக்கு உயரழுத்த மின் கம்பிகள் செல்கிறது. இந்த இடத்தில், அரசு பள்ளிகளும் உள்ளது. இப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்  பயின்று வருகின்றனர். இந்த மின்கம்பங்கள் கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலில் சாய்ந்தது. மேலும், மின் ஒயர்களும், மின்கம்பங்களை தாங்கி பிடிக்கும் கம்பிகளும் அறுந்து விழுந்தன. மேலும், 30 அடி சாலையில் 15 அடியை ஆக்கிரமித்து மின்கம்பங்களும் உள்ளது.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், திடீரென கீழே விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.இதுகுறித்து  மக்கள் மாவட்ட கலெக்டர்,  அதிகாரிகளிடம் பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்தும்  எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே,இனியாவது பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன்கருதி, உடனடியாக வர்தா புயலால் சாய்ந்த உயரழுத்த மின்கம்பங்களை அகற்றி, மாற்று மின்கம்பங்கள் நடவும், சாலையின் நடுவில் செல்லும் கம்பங்களை அகற்றவும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : storm ,Varda ,motorists ,
× RELATED ஆடல் பாடல் நிகழ்ச்சியில் தகராறு 3 பேர் காயம்: 4 பேர் மீது வழக்கு