×

பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து தொடக்கம் ஒரு வாரத்திற்கு பரிேசாதனை அடிப்படையில் திறப்பு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

நாகர்கோவில், டிச.20: பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் பரிசோதனை அடிப்படையில் ஒரு வார காலத்திற்கு வாகன போக்குவரத்து நேற்று தொடங்கியது. நாகர்கோவில், பார்வதிபுரத்தில் ₹114 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த ஆண்டு அடிக்கல் நடப்பட்டு, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. பாலத்தின் கீழே அணுகு சாலைகள் சீரமைக்க வேண்டியது உள்ளது. அந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பார்வதிபுரம் மேம்பாலம் மக்கள் பார்வையிடும் வகையில், கடந்த 15ம் தேதி மக்கள் பார்வை தின விழா நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் வந்து பாலத்தை பார்வையிட்டனர்.  அப்போது மார்த்தாண்டம் பாலத்தில் 19ம் தேதியும், பார்வதிபுரம் பாலத்தில் 23ம் தேதியும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும், அணுகுசாலை பணிகள் முடிவடைந்து, பிரதமர் அளிக்கும் தேதியில் திறப்பு விழா நடைபெறும் என பா.ஜ நிர்வாகிகள் கூறியிருந்தனர். இந்தநிலையில் மார்த்தாண்டம், பார்வதிபுரம் பாலத்தில் ஒரே நேரத்தில் வாகனங்கள் பரிசோதனை ஓட்டம் நேற்று நடத்தப்படும் என்றும், காலை 5 மணி முதல் வாகனங்கள் செல்லும் என பொறியாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலையில் பாலத்தின் மீது வாகன போக்கு
வரத்து தொடங்கியது.

மேம்பாலத்தில் கே.பி ரோட்டில் செல்ல ஒரு வழிப்பாதை மீண்டும் அமலில் உள்ளது. எம்எஸ் ரோட்டில் இரு வழிப்பாதையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. களியக்காவிளையில் இருந்து வருகின்ற வாகனங்கள் மின்வாரிய அலுவலக சாலை வழியாகவே வடசேரி செல்ல முடியும். வலது பக்கமாக கே.பி ரோட்டில் செல்ல முடியாது. ஆனால் கே.பி ரோட்டில் களியக்காவிளை நோக்கி வாகனங்கள் செல்ல முடியும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக போக்குவரத்து போலீசாரும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு
வருகின்றனர். புதியதாக சாலைகள், பாலங்களில் வழித்தடத்தை குறிக்கும் வகையில் போக்குவரத்து அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று காலையில் முதன் முறையாக வாகனங்கள் பாலத்தின் மீது சென்றாலும் கனரக வாகனங்கள் பல மாற்றுப்பாதையில் சென்றதை காண முடிந்தது. பாலம் பரிசோதனை அடிப்படையில் போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்ட தகவல் போதிய அளவில் சென்று சேராதததும் இதற்கு காரணம் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.


மார்த்தாண்டம் மேம்பாலம் மார்த்தாண்டத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 220 கோடியில் நடந்து வந்த மார்த்தாண்டம் மேம்பால பணிகள் தற்போது ஏறத்தாழ முடிந்து விட்டது. மார்த்தாண்டத்தில் நேற்று அதிகாலை 5 மணியளவில், மேம்பாலம் ெதாடங்கும் வெட்டுவெந்நி மற்றும் பம்மம் பகுதிகளில் பா.ஜ சார்பில் பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், பா.ஜ குழித்துறை நகர தலைவர் பக்தசிங், நிர்வாகிகள் சஜூ, ராஜன், போக்குவரத்து கழக அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பாலத்தில் வாகன போக்குவரத்து தொடங்கியது. போக்குவரத்து ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் செந்தில் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் வாகனங்களை ஒழுங்குபடுத்தி விட்டனர். பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. பாலத்தில் செல்வது மகிழ்ச்சியான, புதிய அனுபவமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

இந்த இரு பாலங்களிலும் ஒரு வார காலத்திற்கு வரும் 25ம் தேதி வரை மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வரலாம். பின்னர் 4 நாட்களுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடத்தப்படும். தொடர்ந்து டிசம்பர் 29ம் தேதி வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு ஜனவரி 2 வரை ெதாடரும். அதன் பின்னர் மீண்டும் ஜனவரி 12ம் தேதி முதல் தொடர்ந்து பாலத்தில் வாகனங்கள் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் நாட்களில் கீழ்ப்பக்கமாக வாகனங்கள் செல்லலாம். அதற்குள் பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பக்க சாலை ஒரு வாரத்தில் தயாராகிவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலங்களில் வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளதால் நாகர்கோவிலில் மாற்றுப்பாதைகளாக இருந்த ஆசாரிபள்ளம் ரோடு, அசம்பு ரோடு ஆகியவற்றில் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. தெருக்களிலும், குறுக்கு சாலைகளிலும் வாகனங்கள் போக்குவரத்து குறைந்துள்ளதுடன் வாகன நெருக்கடியும் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Motorists ,Marthandam ,Paradipuram ,
× RELATED மார்த்தாண்டம் அருகே பைக் திருட்டு