×

கருங்கலில் வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கூட்டம் 2019ல் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பேட்டி

கருங்கல், டிச. 20: கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குச்சாவடி பிரதிநிதிகள் கூட்டம், கருங்கல் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், மேற்கு வட்டார தலைவர் என்.ஏ. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், வசந்தகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆஸ்கர் பிரடி, டைட்டல், கருங்கல் நகர காங்கிரஸ் தலைவர் பிரேம்சிங், பஞ்சாயத்து கமிட்டி தலைவர்கள் எட்வின்துரை, சதீஷ், சுரேஷ் கியூபர்ட் ராஜ் உள்பட மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, வாக்குச்சாவடி பிரதிநிதிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் கட்சி தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: தமிழகத்தில் அதிமுக அரசின் ஆட்சி, மத்திய பாஜக அரசின் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சியாக உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் அனைத்து ெதாகுதிகளையும் கைப்பற்றும். பாஜகவின் மோடி அரசு மக்களுக்கு எதிரான ஆட்சி செய்ததால்தான் அவர்களுக்கு எதிரான தீர்ப்பு அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் மூலம் கிைடத்தது. மோடி அரசில் ஏமாற்றப்பட்ட மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்த இளைஞர்களுக்காக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக அனைத்து குைறகளை நிவர்த்தி செய்யும் வகையில் வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றார்.

Tags : Polling delegates ,Black Sea ,Congress ,General Secretary ,Rahul Gandhi ,
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துக்கான...