×

கோட்டூர்புரம் ஆகாஷ் மருத்துவமனையில் 3,600 பேருக்கு இலவச பரிசோதனை

கீழ்ப்பாக்கம்: சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள ஆகாஷ பன்நோக்கு மருத்துவமனையில் நடந்த முகாமில் பல்வேறு நோய்கள் குறித்து 3600 பேருக்கு இலவச மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது.சென்னை கோட்டூர்புரம் ரயில் நிலையம் எதிரே ஆகாஷ் பன்நோக்கு மருத்துவமனை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம், பெண்களின் பாலியல் பிரச்னைக்கு தீர்வுகாணும் அதிநவீன  கருவியான பெமிலிப்ட் என்ற புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டு, எலும்பு மற்றும் மூட்டுவலி அறுவை சிகிச்சை மையம், காமராஜ் ஆண்களுக்கான சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 3 நாட்களாக  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில், மருத்துவமனை இயக்குனர்கள் காமராஜ், ஜெயராணி காமராஜ், எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ராதாகிருஷ்ணன், டாக்டர் நிவேதிதா ஆகியோர் 3600 பேருக்கு பரிசோதனை செய்து இலவச சிகிச்சை  அளித்தனர்.இதில், 1500 பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், நீரிழிவு, ரத்த சோகை பரிசோதனை செய்யப்பட்டது. 40 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 26 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை பெற ஆலோசனை வழங்கப்பட்டது. 300 பெண்களுக்கு எலும்பு மெலிதல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஆண்களில் 500 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது. அனைவருக்கும் தலா 1000 மதிப்பிலான ஸ்கேன் பரிசோதனை மற்றும் இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஆண்கள், பெண்கள் என  ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

Tags : trial ,Kotakpuram Akash Hospital ,
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை