×

போலி சான்றிதழ் வழங்கிய வழக்கில் கப்பல் கேப்டன் உள்பட 5 பேருக்கு 4 ஆண்டு சிறை: சிபிஐ நீதிமன்றம் அதிரடி

சென்னை: சென்னையை சேர்ந்தவர்கள் ரவி, ராமலிங்கம், சேவியர் ஆண்டோ கவாசினி. இவர்கள் கப்பலில் பணியாற்றுவதற்கு தேவையான சான்றிதழ் வழங்கக்கோரி மத்திய அரசின் கடல் ஆலோசகர் அலுவலகத்தில்  விண்ணப்பத்தனர். விண்ணப்பத்தில் அவர்கள் போலி அனுபவ சான்றிதழ் கொடுத்திருந்தனர். இதனை கண்டுபிடித்த அதிகாரி மிஸ்ரா என்பவர்  விவகாரம் தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அந்தோணி பிச்சை என்பவர் மூலம் ₹55 ஆயிரம் லஞ்சமாக பெற்றுக்கொண்டு  சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேர் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்பு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  குற்றம்சாட்டப்பட்ட மிஸ்ரா உள்பட 5 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ₹2.25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Tags : persons ,ship captain ,CBI ,
× RELATED சல்மான்கான் வீடு முன் துப்பாக்கியால்...