×

வீரபாண்டியில் ₹5 லட்சம் மதிப்பில் புதிய தடுப்பணை

ஆட்டையாம்பட்டி, டிச.19: வீரபாண்டி வட்டாரம் கஞ்சமலை சடையாண்டி ஊற்று அருகே, ₹5 லட்சத்தில் தடுப்பணை  கட்டப்பட்டுள்ளது. வீரபாண்டி வட்டாரத்தில் சின்னசீரகாபாடி தொகுப்பு, பெரியசீரகாபாடி, ராஜாபாளையம், நைனாம்பட்டி, பெத்தாம்பட்டி, உத்தமசோழபுரம், அரியாம்பாளையம், அக்கரபாளையம், பாலம்பட்டி, வீரபாண்டி, பெருமாகவுண்டம்பட்டி மற்றும் ரெட்டிப்பட்டி ஆகிய கிராமங்களை கொண்டு 100 ஏக்கர் பரபரப்பளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வேளாண் பொறியியல் துறை சார்பில், வீரபாண்டி வட்டாரத்தில் ₹5 லட்சம் மதிப்பில் சீரகாபாடி கஞ்சமலை சடையாண்டி ஊற்று அருகில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதை வேளாண் உதவி இயக்குனர் (ெபா) கார்த்திகாயினி, வேளாண் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் உதவி வேளாண் அலுவலர் முருகன், உதவி தொழில்நுட்ப மேலாளர் தீபன்முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED எம்பிபிஎஸ் மாணவி மாயம்