×

ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டையில் வசிக்கும் ஓய்வூதியர்களுக்கு மலைவாழ் படி மின்வாரிய ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி, டிச.19 :   கிருஷ்ணகிரியில் உள்ள மின்வாரிய ஓய்வூதியர் சங்க அலுவலகத்தில் ஓய்வூதியர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சொக்கநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர். அசோக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாதாந்திர காலண்டரை வெளியிட்டு பேசினார். அவர் பேசுகையில், மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், புதியதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் குறித்தும் விளக்கினார்.

அத்துடன் மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையினை தலைமை மருத்துவமனை பெறலாம், என்றார்.   சிறப்பு அழைப்பாளர்களாக யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவிந்தராசன் ஆகியோர் பங்கேற்று, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு குறித்தும், காப்பீடு செய்தவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்தும் விளக்கினர்.  நிகழ்ச்சியின் போது சங்கத்தின் செயலாளர் சந்திரசேகரன், ஓய்வூதியர்கள் பெற்ற சலுகைகள், ஓய்வூதியர்களின் விழா மலர், மறுமணம் புரிந்தோர், திருமணமாகாத மகள் இவர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுத் தந்ததையும், ஓய்வூதியம் என்பது கருணைத் தொகை அல்ல அதுவும் ஊதியமே என்று போராடி பெற்றுத்தந்த நகராவிற்கு நன்றி தெரிவித்து பேசினார்.  

பின்னர் நடந்த கூட்டத்தில், ஓய்வூதியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை தொடரவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 21 மாத ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழ்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு பிடித்தம் ரூ. 350 என்பதை ரூ. 150 ஆக குறைக்க வேண்டும். ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதியில் வசிக்கும் ஓய்வூதியர்களுக்கு மலைவாழ்ப் படி மற்றும் குளிர்காலப் படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : pensioners ,Electricity Pensioners Association ,Hosur ,Suluggery ,
× RELATED குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் மூச்சுச்திணறல்