×

இரண்டாவது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை கோரி எஸ்பியிடம் மனைவி மனு

விருதுநகர், டிச. 19: விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில், கோப்பையநாயக்கன்பட்டி மாரிச்செல்வி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும் சிவகாசியை சேர்ந்த மாரிமுத்துவுக்கும் 2010ல் திருமணம் நடைபெற்றது. அப்போது மூன்றரை பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை வழங்கப்பட்டது. இந்நிலையில், குழந்தை இல்லாததால் எனது கணவர், என்னை தினசரி அடித்து கொடுமைப்படுத்தினார். பிரச்னையின்றி வாழ மேலும், 10 பவுன் நகை, ரூ.50 ரொக்கம் கொடுக்க வேண்டும் என கணவரின் பெற்றோர் தெரிவித்தனர்.

இந்நிலையில், 2016ல் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், எனது கணவர், குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தார். மாமனார் சுந்தரலிங்கம், மாமியார் பாப்பா, நாத்தனார் எலிசபெத் ராணி, பொன்னுத்தாய், திலகராணி ஆகியோர் கதவை பூட்டி அடித்து விரட்டினர். அதன்பின், சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் கணவர் மாரிமுத்து விவகாரத்து கோரி தாக்கல் செய்த மனுவை 27.11.2016ல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கணவர் மாரிமுத்து 4 மாதங்களுக்கு முன், மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.என்னையும், குழந்தையை காப்பாற்றவும், நகைகளை அபகரித்து கூடுதல் வரதட்ணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் மாரிமுத்து, மாமனார் சுந்தரலிங்கம், மாமியார் பாப்பா, நாத்தனார் எலிசபெத் ராணி, பொன்னுத்தாய், திலகராணி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி ராஜராஜன், சிவகாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
போலீஸ் தேர்வில் பெண் நிராகரிப்பு

Tags : SPP ,
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்