×

நம்புதாளை ஊராட்சியில் தொழுநோய் கண்டறிதல் முகாம்

தொண்டி, டிச.19: தொண்டி அருகே நம்புதாளை ஊராட்சியில் வீடு வீடாக சென்று தொழுநோய் கண்டறிதல் பணியினை சுகாதார துறையினர் ஈடுபட்டனர். தொழுநோய் ஒரு பாக்டீரியா கிருமியால் பரவுகிறது. ஆரம்ப நிலையில் தொடர் சிகிச்சை அளித்தால் நோயை குணப்படுத்தி விடலாம். ஆரம்ப சிகிச்சை பெற தவறினால் நரம்பில் பாதிப்பு ஏற்ப்பட்டு ஊனம் ஏற்படும். உடம்பில் சிவந்த உணர்ச்சியில்லாத தேமல், கை கால்கள் நரம்புகள் தடுத்து உணர்ச்சி இல்லாமல் இருப்பது தொழுநோயின் அறிகுறியாகும். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தெரு, மேற்கு தெரு, படையாச்சி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு வீடாக சென்று தொழுநோய் கண்டறிதல் முகாம் நடந்தது.

மேலும் தொழுநோய் குறித்தும், பரவும் விதம் குறித்தும் விளக்கினர். வீட்டில் உள்ள அனைவரையும் பரிசோதித்தனர். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து கடைகளிலும் உள்ளவர்களிடமும் சோதனை நடைபெற்றது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபெருமாள், தொழுநோய் வட்டார மேற்பார்வையாளர் ராஜ சேகரபாண்டியன், சுகாதார ஆய்வாளர் காளிமுத்து உட்பட சுகாதார செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

Tags : Leprosy detection camp ,trust village ,
× RELATED நாகப்பட்டினம், தலைஞாயிறில் 17ம்தேதி...