×

திருமங்கலம் பகுதியில் மொச்சையை தாக்கும் பச்சாலை

திருமங்கலம், டிச. 19: திருமங்கலம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மொச்சை செடிகளில் பச்சாலை தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காண வேளாண்துறை வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருமங்கலம் அருகே சாத்தங்குடி, புள்ளமுத்தூர், போல்நாயக்கன்பட்டி,திரளி, காண்டை, பச்சகோபன்பட்டி, பன்னீர்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் மொச்சை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆடி, ஆவணி மாதங்களில் விதைப்பு செய்யப்படும் மொச்சை மார்கழி மாதத்தில் பூ பூத்து தை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம்.

 தற்போது பூத்துள்ள மொச்சை செடிகளில் பச்சாலை நோயின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் பிஞ்சு பிடிப்பதிலும், காய் காய்ப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருந்து அடித்தும் இந்நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இந்தாண்டு மொச்சை விளைச்சல் பாதிக்குமென விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே வேளாண்துறை அதிகாரிகள் பச்சாலை நோய் தாக்குதலுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : drought ,area ,Tirumangalam ,
× RELATED குளிக்கும்போது வீடியோ எடுத்து...