×

வீட்டில் கிடந்த கூர்க்கா பிணம்

மேலூர் அருகே கருங்காலக்குடியில் வர்த்தகர் சங்கம் சார்பில் கூர்க்கா ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் அப்பகுதியிலே வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. உள்ளே சென்று பார்த்த போது கூர்க்கா உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். விசாரணையில் அவரது பெயர் ஷேர்சிங் (52) என்பது தெரிந்தது. இவரது இறப்பு குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Gorkha ,house ,
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி