×

ஒப்பந்தக்காரரை கைது செய்யக்கோரி அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை

அறந்தாங்கி, டிச.19: அறந்தாங்கி நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊதியத்தை குறைத்து கொடுத்து, மோசடியில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரரை கைது செய்ய வலியுறுத்தியும்,நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும்,  தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி நகராட்சியில் கடந்த 2017ம் ஆண்டு துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார்நிறுவனம் மூலம் 102 ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.223 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஊதியத்தை ஒப்பந்தக்காரர்இளவரசன் என்பவர்பெற்று தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.192 மட்டுமே வழங்கி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து  தகவல் அறிந்த ஒப்பந்த தொழிலாளர்கள், தங்களுக்கு நகராட்சி வழங்கிய ஊதியத்தை வழங்க வேண்டும் என அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.6 லட்சத்தை ஒப்பந்தக்காரர்இளவரசன், நவம்பர்மாதம் ஊதியத்தோடு, வழங்குவார்என உறுதி அளித்தனர்.

ஆனால் அதிகாரிகளின் உறுதிமொழிப்படி, இளவரசன் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் 102 பேரும், நேற்று காலை பணி புறக்கணிப்பு செய்து, அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அறந்தாங்கி நகராட்சி ஆணையர்(பொ)மீராஅலி, துப்புரவு அலுவலர்முத்துகணேஷ், இன்ஸ்பெக்டர்பாலமுருகன் ஆகியோர்பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags : municipality office ,
× RELATED வாசுதேவநல்லூர், சிவகிரியில் அரசு...