×

நேரு யுவகேந்திரா சார்பில் கலாசார பரிவர்த்தனை 20 பேர் டாமன் பயணம்

காரைக்கால், டிச.19: நேரு யுவகேந்திரா சார்பில், கலாசார பரிவர்த்தனைக்காக,  காரைக்காலிலிருந்து 20 இளைஞர்கள் நேற்று டாமன் புறப்பட்டனர்.நேரு யுவகேந்திரா சார்பில், மாநில அளவிலான இளையோர் கலாசார பரிவர்த்தனை முகாம், டாமன் யூனியன் பிரதேசத்தில் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக, காரைக்கால் நேரு யுவகேந்திரா அமைப்பில் உள்ள 20 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் புதுச்சேரியிலிருந்து ரயில் மூலம் டாமன் செல்லும் வகையில் வழியனுப்பு விழா நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா கணக்காளர் தவமணி, நுகர்வோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மைய தலைவர் பாரீஸ் ரவி மற்றும் நேரு யுவகேந்திரா மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டியன், சேவை தொண்டர் மூகாம்பிகை ஆகியோர் டாமன் புறப்பட்ட இளைஞர்களை வாழ்த்தி வழியனுப்பினர். இந்த முகாமின்போது, டாமனில் தங்கியிருக்கும் இளைஞர்கள், அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்வதோடு, தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவும், சமய நல்லிணக்கத்தைக் காக்கும் விதமாகவும், இளைஞர்களை தேச நிர்மாணத்தில் பயன்படுத்தவும், தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்படுவர் என நுகர்வோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மைய தலைவர் பாரீஸ் ரவி தெரிவித்துள்ளார்.

Tags : Daman ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு தலைவர் கொள்கையை...