×

நாடு முழுவதும் விதைப்பந்து தூவ பிரதமருக்கு பள்ளி மாணவி கடிதம் தினமும் 5 நிமிடம் தியானம்

கரூர், டிச.19:  நாடு முழுவதும் விதைப்பந்து தூவ பிரதமருக்கு பள்ளி மாணவி கடிதம் அனுப்பியதோடு தினமும் 5 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். புவி  வெப்ப மயமாதலை தடுக்க ராமேஸ்வரபட்டி பள்ளி மாணவி ரக்ஷனா என்பவர் பிரதமர்  மோடி, ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் ஆகியோருக்கு நேற்று கரூர் தலைமை  தபால் நிலையத்தில் தபால் கடிதம் அனுப்பினார். அதில், இந்தியாவிலும்,  அனைத்து நாடுகளிலும் விதைப்பந்து தூவ வேண்டும். பறவை வேட்டையாடுவதை தடுக்க  ஐநாவில்
சட்டம் இயற்ற வேண்டும்.

உலகில் 2400கோடி விதைப்பந்து தூவினால் புவி வெப்பமயமாதலை தடுத்து, சுனாமி, பூகம்பம், திடீர் புயல்,  பனிமலை உருகுதல், போன்ற இயற்கை சீற்றம் தடுத்து பருவ மழை தவறாது பெய்து  வருங்கால உலகை கீரின்வேர்ல்டு ஆக மாற்றி, வருங்கால சந்ததி வாழவழி செய்ய  முடியும் என குறிப்பிட்டுள்ளார்.தினமும் 5நிமிடம் இக்கோரிக்கையை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் அருகே மாணவி ரக்ஷனா தியானம் செய்து வருகிறார்.

Tags : school student ,country ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!