×

தருவைகுளம் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

குளத்தூர்,டிச.19: தருவைகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.தருவைகுளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கின் 28அன்பிய மக்கள் சார்பில் கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் கபிரியேல் தூதர் அன்பியத்தின் சார்பில் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு நிகழ்ச்சிகள் நாடகமாக நடித்து காட்டினர். தொடர்ந்து ஏழை மக்களுக்கு பங்குத்தந்தை எட்வர்ட்ஜே, பர்னபஸ் பல்வேறு உதவிகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பேட்ரிக்அந்தோணிவிஜயன், திலகராஜா, வேதியர் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அன்பிய தலைவி புரோஷியாராஜன், அருட்சகோதரிகள் மேரி, அமலா, செலினா ஆகியோர் செய்திருந்தனர்.


Tags : ceremony ,Thuruvukulam Temple ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...