போதை பொருள் சப்ளை செய்த 2 வாலிபர்கள் கைது

பூந்தமல்லி: போரூர் ரவுண்டானா சந்திப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியே வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் 3 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட மாவா போதைப் பொருள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வியாசர்பாடியை சேர்ந்த விஜய் (24), என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மாவா போதைப் பொருளை சப்ளை செய்து வந்த வட மாநில வாலிபர்கள் ரமேஷ்குமார் (31), விபேஷ்கன்னா (32) ஆகிய இருவரை போலீசார் தேடி வந்தனர்.

நுங்கம்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த அவர்களை நேற்று போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள், பல கடைகளுக்கு மாவா சப்ளை செய்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : youths ,
× RELATED போதைப்பொருள் வைத்திருந்த மாணவன் உள்பட 4 பேர் கைது : கார் பறிமுதல்