×

லஞ்சம் தராததால் பொய் வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கு 50 ஆயிரம் அபராதம்

சென்னை: விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘நான் ஊர் தலைவராக இருந்து வருகிறேன். கடந்த 2015ம் ஆண்டு செஞ்சி, ரோசனை காவல் நிலைய எஸ்ஐ சதீஷ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் என்னை காவல் நிலையம் அழைத்து சென்று, லஞ்சம் கேட்டு மிரட்டினர்.  கொடுக்கவில்லை என்றால் பொய் வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டினர். பின்னர் எனது சொத்து பத்திரங்களை எடுத்துவர சொல்லி அதில் ஒரு நிலத்துக்கு 2 லட்சம் எனக்கு கொடுத்துவிட்டு நிலத்தை வாங்கிக் கொண்டனர். மேலும் 3 லட்சம் லஞ்சமும் கேட்டனர்.

இதனால் எனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ சதீஸ் ஆகியோர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே ராமமூர்த்திக்கு அரசு 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். அதை இன்ஸ்பெக்டர், எஸ்ஐயிடம் இருந்து வசூல் செய்து கொள்ள வேண்டும். என்று கூறி உத்தரவிட்டார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...