×

மதுராந்தகத்தில் அரசு கல்லூரி இல்லாததால் படிக்க நாள்தோறும் 150 கிமீ பயணம்

மதுராந்தகம், டிச. 19: மதுராந்தகம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அரசு கல்லூரி இல்லாததால் அப்பகுதி இளைஞர்கள் கல்லூரி படிக்க சுமார் 150 கி.மீ செல்ல வேண்டிய நிலை உள்ளது. மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர் போன்ற பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் உள்ளனர். இவர்கள் தங்கள் பள்ளி படிப்பை முடித்து தேர்வில் பெற்ற பதிப்பெண்களுக்கு ஏற்றார்போல் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர். ஆனால், சொந்த ஊரான மதுராந்தகத்தில் ஒரு அரசு கல்லூரி கூட இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், பெரும்பாலான இளைஞர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி போன்ற பல கிலோ மீட்டர்கள் தள்ளி சென்று படிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்படுகிறது. இது ஒருபுறம் இருக்க வெளி ஊர்களுக்கு படிக்க செல்லும் இவர்களில் பலருக்கு அரசு விடுதிகளில் தங்கிப்படிக்க இடம் கிடைப்பதில்லை. இதனால், அவர்கள் தினமும் சொந்த ஊருக்கு வந்து செல்ல வேண்டும் அல்லது கல்லூரி அமைந்துள்ள பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிப் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதில், கிராமங்களில் இருந்து வெளியில் படிக்க செல்லும் பெருமாபாலான இளைஞர்களின் குடும்பங்கள் ஏழ்மை நிலையில் அது மாணவர்களையும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கூடுதல் பொருளாதார சுமை ஏற்படுகிறது.
 இதுபோன்ற காரணங்களால் பல மாணவர்கள் கல்லூரி படிப்பை முழுமையாகவோ அல்லது பாதியிலேயே கைவிடும் நிலை ஏற்படுகிறது.  இந்த நிலையை ஒழிக்க மேற்கண்ட பகுதிகளின் மையப் பகுதியாக விளங்கும் மதுராந்தகம் நகரில் ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரியினை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 20 ஆண்டு கோரிக்கையாகும். குறிப்பாக சூனாம்பேடு, செய்யூர், ஒரத்தி போன்ற பகுதிகளிலிருந்து சென்னை அல்லது செங்கல்பட்டு கல்லூரிகளுக்கு சென்று வர வேண்டுமானால் அவர்கள் சுமார் 150 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய நிலை தற்போது உள்ளது.

ஆனால் மதுராந்தகம் நகரில் கல்லூரி இருக்குமேயானால் இவர்கள் 50 கிலோமீட்டர் பயணம் செய்தாலே போதுமானது. இதனால், கிராமங்களில் இருந்து வெளிருக்கு படிக்க செல்லும் இளைஞர்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்படும். அவர்கள் குடும்பங்களில் பொருளாதாரச் சுமையும் குறையும் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.  இதுகுறித்து, மதுராந்தகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் எ.ராஜேந்திரன் என்பவர் கூறுகையில்; ‘நான் இந்த பகுதியில் உள்ள பல பள்ளிகளில் பணியாற்றி உள்ளேன்.

 நான் பார்த்தவரை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பலர் கல்லூரிப் படிப்பைத் தொடரவில்லை. இதற்கு முக்கிய காரணம் நீண்ட தூரம் சென்று கல்வி கற்க வேண்டும் என்பது தான். கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த கோரிக்கை இருந்து வருகிறது. ஆனால், இதுவரை அதற்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனால், காலம் மாறி வருகிறது. எனவே, இனியாவது கிராமப்புற இளைஞர்களின் நலனை கருத்தில்கொண்டு அரசு தக்க நடவடிக்கை எடுத்து மதுராந்தகம் நகரில் ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED கடந்த ஆண்டை விட 30 சதவீதம் விற்பனை...