×

அரங்கநாதர் கோயிலில் மார்கழி உற்சவம்

மயிலம், டிச. 18:   மயிலம் கோயிலில் மார்கழி உற்சவம் துவங்கியது. மயிலம் தென் கொளப்பாக்கம் சாலையில் உள்ள அரங்கநாத பெருமாள் கோயிலில் மார்கழி உற்சவத்தை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு அரங்கநாத சுவாமிக்கு திருமஞ்சன வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது.  விழா ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.உளுந்தூர்பேட்டையில் விபத்துகளை தடுக்க அதிநவீன பிரதிபலிப்பான்உளுந்தூர்பேட்டை, டிச. 18:உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட்டில் இருந்து உளுந்தூர்பேட்டை நகரப்பகுதிக்கு வரும் அரசு மற்றும் தனியார் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் முக்கிய வளைவில் திரும்பும்போது திருச்சியில் இருந்து டோல்கேட் நோக்கி வரும் வாகனங்கள் ஒன்றுடன், ஒன்று மோதிக்கொண்டு ஏராளமானவர்கள் உயிரிழந்தும், படுகாயம் அடைந்து வருகின்றனர். இதனை தடுக்க இந்த பகுதியில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையின் சார்பில் ரூ. 1.75 லட்சம் மதிப்பிலான அதிநவீன பிரதிபலிப்பான்கள் அமைக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமை தாங்கி விபத்துகளை தடுக்க கூடிய அதிநவீன பிரதிபலிப்பான்களை துவக்கி வைத்தார். அப்போது எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் இதுபோன்ற அதிநவீன பிரதிபலிப்பான் அமைக்கப்பட்டுள்ளதில் உளுந்தூர்பேட்டை இரண்டாவது இடம். டோல்கேட் வளைவில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதை தடுப்பதற்கான முதல்கட்ட முயற்சியாக இந்த அதிநவீன பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரதிபலிப்பான்கள் பகல் மற்றும் இரவு என 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் விளக்கு எரிவதால் வாகன ஓட்டுனர்கள் தங்களது வேகத்தை குறைத்து வாகனங்களை ஓட்டும் நிலை ஏற்படும், இதனால் விபத்துகள் முற்றிலும் குறைய வாய்ப்பு உள்ளது, இதேபோல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அதிகமான விபத்துகள் நடைபெற்று வரும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் இதுபோன்ற அதிநவீன பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட உள்ளது என்றார். அப்போது உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன், போக்குவரத்து ஆய்வாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

Tags : Marakkal Utsavam ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை