×

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பெரும்பான்மையான ஊராட்சிகளில் புயல் நிவாரணம் வழங்கவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு

கந்தர்வகோட்டை, டிச.18: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 36ஊராட்சிகள் உள்ளன. இவைகள் மட்டுமின்றி புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை  சேர்ந்த வளவம்பட்டி மற்றும் சோத்துப்பாளை ஊராட்சிகள் கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ளது. தற்போது மலையப்பட்டி, குரும்பூண்டி, புதுநகர், சோத்துப்பாளை மற்றும் வெள்ளாளவிடுதி ஊராட்சிகளுக்கு மட்டுமே அரசு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதிலும் அனைத்து ரேஷன் கார்டுகள்படி நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுப்பின்படி நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1524 குடும்பங்களுக்கு மட்டும் அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையானோருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்க வில்லை என மக்கள் குற்றம்சாட்டினர்.கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தவரை தற்போது 15ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.  கால்நடைகளில் 8 மாடுகள், ஆடு 33. கோழி 583 ஆகியவைகள்  இறந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பயிர்சேதங்கள் முழுமையாக எடுக்கப்படவில்லை. மேலும் தற்போது கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அரிமளம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தய போட்டி