×

குளத்தூர் தாலுகாவில் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும்

புதுக்கோட்டை, டிச. 18: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலத்தில்  நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை வகித்து மனுக்களை பெற்றார். அப்போது குளத்தூர் தாலுகா தொடையூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த இடத்தை கடந்த 1983-84ம் ஆண்டு அரசு எங்களுக்கு இலவசமாக வழங்கியது. இந்த இடத்தில் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் நாங்கள் வசித்து வந்தோம். இந்நிலையில் புயல் தாக்கியதில் எங்கள் வீடுகள் சேதமடைந்து உள்ளன. எங்கள் நிலத்திற்கான பட்டா அன்னவாசல் வட்டார வளர்ச்சி அதிகாரி பெயரில் உள்ளது. எனவே மேற்படி பட்டாவை எங்களது பெயருக்கு மாற்றி, சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கைபொன்னமராவதி ஒன்றியத்தில்பாழடைந்து கிடக்கும் அரசு அலுவலர் குடியிருப்புகள்பொன்னமராவதி,டிச.18: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பாழடைந்து கிடக்கும் அலுவலர் குடியிருப்பு வீடுகளை சீர் செய்யவேண்டும் என  அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மேற்குப்பகுதியில்  அலுவலர்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டு வேளாண்துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருந்து வந்தனர். இந்த குடியிருப்பு வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் பல ஆண்டுகளாக இடிந்து சேதமடைந்தது. இதனால் இந்த குடியிருப்பில் யாரும் குடியிருக்கவில்லை. இந்த பகுதியில் இப்பபோது வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த குடியிருப்பைச்சுற்றி அரசு அலுவலகங்கள் உள்ளன.இங்கு பணிபுரியும் அலுவலர்கள் நீண்ட தூரத்தில் இருந்து வந்து பணிபுரிந்து செல்கின்றனர். பலர் அதிக வாடகை கொடுத்து குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்புகள்  சீரமைக்கப்பட்டால்  இங்கு பணிபுரியும் அலுவலர்கள் குடியிருக்க வசதியாக இருக்கும். இங்கு 20க்கும் மேற்பட்ட வீடுகள் பாழடைந்து கிடக்கின்றது. இந்த அலுவலர்கள் குடியிருப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டவேண்டும், அல்லது இந்த வீடுகளை சீர் செய்யவேண்டும்  என அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்சீரமைக்க கோரிக்கை

Tags : homes ,storm victims ,taluka ,Kulathoor ,
× RELATED மனைவியை கொன்று புதைத்து கணவன் தூக்கிட்டு தற்கொலை