எச்.ராஜாவை கண்டித்து சாலைமறியல்

திருக்கனூர், டிச. 18:  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசிய பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து, திருக்கனூர் கடைவீதியில் கட்சியின் தொகுதி செயலாளர் சிவசங்கர் தலைமையிலும், பொருளாளர் பாண்டுரங்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் நடைபெற்றது. போராட்டத்தில் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்தனர். இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட தொகுதி செயலாளர் சிவசங்கர் உள்பட 36 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

அதேபோல திருபுவனையிலும் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் - புதுவையில் சாலையில் தொகுதி செயலாளர் விடுதலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் அன்பரசன், விடுதலைவளவன், திருநாவுக்கரசு, திலீபன், ஜெகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 50 பேரை திருபுவனை உதவி ஆய்வாளர் பிரியா கைது செய்தார். மறியல் காரணமாக விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Roadmarket ,H Raja ,
× RELATED ஏனாமில் 13 ஆயிரம் மக்களை வெளியேற்ற கவர்னர் உத்தரவு