×

ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேலஞ்சர்ஸ் -2018 கலை நிகழ்ச்சி

திருச்சி,டிச.18: உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கு அதிகமான மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையினால் மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் வகையில் பலவேறு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் விதத்தில் திருச்சி ஜோசப் கண்மருத்துவமனை மாற்றுத்திறனாளிகளிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தி சமூக நடைமுறை சவால்களை எதிர்கொள்ளும் விதத்தில் ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சேலஞ்சர்ஸ் மீட் என்ற மேடையை ஏற்படுத்தி ஊக்கப்படுத்தி வருகிறது.

இந்தாண்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்களான திருச்சி பட்டர்பிளை, திருச்சி ராக்சிட்டி மற்றும் திருச்சி பினாக்கிள் உடன் இணைந்து சேலஞ்சர்ஸ் -2018 மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நேற்று நடத்தியது. நிகழ்ச்சியினை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் மாவட்டம் 3000 கண்ணன் ஆகியோர் துவங்கி வைத்தனர். மாவட்ட செயலாளர் ஜெரால்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் துணை ஆளுநர் ராமச்சந்திரன்பாபு, முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் திருச்சி மாவட்டத்தில் இருந்து 22க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் நாடகம், பேஷன்ஷோ, பாட்டு மற்றும் நடன போட்டிகளில் கலந்து கொண்டு தனிப்பட்ட மற்றும் அணி சார்பில் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் மாணவ, மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அனைவரையும் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் தலைமையில் டாக்டர் தனுஜாபிரிட்டோ, பட்டர்பிளை ரோட்டரி கிளப் துணை இயக்குநர் ஜானகி ஆகியோர் வாழ்த்தி வரவேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் சொக்கலிங்கம், முத்துமாணிக்கம் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சுபாபிரபு, மக்கள் தொடர்பு அதிகாரி தர், ஜெயசீலன் ஆகியோர்செய்திருந்தனர்.

Tags : persons ,art show ,Joseph Eye Hospital ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...