×

கம்பம் பகுதிகளில் கந்துவட்டி அதிகரிப்பு பெண்களை மிரட்டும் மைக்ரோ பைனான்சியர்கள்

கம்பம், டிச.18: கம்பம் பகுதிகளில் பெண்களை மிரட்டி மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கந்துவட்டிக்கு கொடுப்பது அதிகரித்து வருகிறது. கம்பம், நாராயணதேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம், கூடலூர், உள்ளிட்ட ஊர்களில் மகளிர் சுயஉதவிகுழுக்கள் செயல்படுகின்றன. இவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதனை இவர்கள் நேரடியாக வாங்காமல் டிரஸ்ட் என்ற பெயரில் செயல்படும் கந்துவட்டிக்கும்பல்கள் மூலமாக வாங்குகின்றனர்.  வாரந்தோறும் அசல் பணத்தை வட்டியுடன் வாங்குகின்றனர். இதற்கு மகளிர் சுயஉதவி குழுக்களின் தலைவர்தான் பொறுப்பு என நிர்ணயித்து வருகின்றனர்.

மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் வட்டியை அதிகமானஅளவில் நிர்ணயித்து கொள்ளை அடிப்பது நடக்கிறது. இதனால் வங்கிகளில் குறைந்த அளவு வட்டி என்பது கனவாக உள்ளது.  தனிநபர்கள் அதிக அளவில் வட்டியை நிர்ணயித்து மகளிர் குழு பெண்களிடம் கொள்ளையடிப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே, மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் அதிக வட்டிக்கு வாங்கும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` கந்துவட்டிக்கு கொடுக்கும் நபர்களை கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் மகளிர் சுயஉதவிக்குழு  பெண்களிடம் அதிக வட்டியை வாங்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Tags : women ,pole areas ,
× RELATED கடலூரில் சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் மோதி விபத்து: 2 பெண்கள் காயம்