×

அரசு விழாவில் பட்டா தருவதாக அழைத்துவிட்டு ‘அல்வா’ கொடுத்த அதிகாரிகள் கலெக்டரிடம் மக்கள் கதறல்

திண்டுக்கல், டிச.18: பட்டா தருவதாக அரசு விழாவிற்கு அழைத்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டனர் என்று கூறி ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் குறைதீர்கூட்டத்தில் மனுக் கொடுத்தனர். ஒட்டன்சத்திரம் வள்ளுவர் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பலர் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியுள்ளனர். 30 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரி நேற்று குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க திரண்டு வந்தனர்.

இது குறித்து இவர்கள் கூறுகையில், எங்களுக்கு எவ்வித சொத்தும் இல்லை. இந்த இடத்திலே பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். மனு கொடுத்து கொடுத்து களைத்துவிட்டோம். ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. அப்போது நாங்கள் வசிக்கும் இடத்தை சர்வே செய்தார்கள். பின்பு அரசு விழாவில் பட்டா தருவதாகவும் அழைப்பு விடுத்தனர். ஆர்வத்தோடு நாங்கள் அங்கு சென்றதும் உங்களுக்கு இன்னொருநாளில் பட்டா வழங்கப்படும் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். இதுவரை பட்டா கொடுக்கவில்லை. இங்கு வசிப்பவர்கள் பலரும் கீழ்தட்டு மக்களே. எனவே பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

Tags : government ,festival ,collector ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...