ஓசூரில் பிரைஸ்பேக்டரி 12வது புதிய கிளை திறப்பு சின்னத்திரை ஜாக்குலின் பங்கேற்பு

கிருஷ்ணகிரி, டிச.18:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரயில்வே ஸ்டேஷன்-ராகவேந்திரா தியேட்டர் ரோட்டில் சாந்தி நகரில் பிரைஸ்பேக்டரி ரெடிமேட்ஸ் ஷோரும் 12வது கிளை திறக்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாக இயக்குனர்கள் ராஜாஜம்சீர், குல்முகமது, அபல்கலாம், இஷாக்முகமது, ரபீக்முகமது ஆகியோர் கூறும்போது; எங்களது பிரைஸ் பேக்டரி ரெடிமேட்ஸ் நிறுவனமானது தமிழகத்தில் பல முக்கிய நகரங்களில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் சேலம் குகை, சின்னத்திருப்பதி, கோவை, ஈரோடு, பள்ளிப்பாளையம், ஆத்தூர், மற்றும் ஓசூர், பாகலூர் ரோட்டில் ஏற்கனவே இயங்கி வருகிறது.

தற்போது வெற்றிகரமாக ஓசூரில் 12வது கிளை உதயமாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். திறப்பு விழாவில் சின்னத்திரை புகழ் ஜாக்குலின் கலந்து கொண்டு ஆண்களுக்கான பிரத்யேக பிரைஸ்பேக்டரி ரெடிமேட்ஸ் ஷோருமை திறந்து வைத்தார். மேலும், முதல் விற்பனையையும் அவர் துவக்கி வைத்தார். திறப்பு விழாவினை முன்னிட்டு முதல் 3 நாட்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. எங்களிடம் ஆண்கள் அனைவருக்கும் ஏற்ற வகையில் டி.சர்ட் 69 ரூபாய்க்கும், ஜீன்ஸ் பேண்ட் 299, நார்மல் பேண்ட் 199, சர்ட் 149 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது வேஷ்டி, லுங்கி, சர்ட், பாடிஸ்பிரே, பெல்ட், ஸ்கூல்பேக்,  டிராக்பேண்ட், ஷீசு, ஷார்ட்3-4 ஆகியவை விற்பனைக்கு உள்ளது. வாடிக்கையாளர்கள் நலன் கருதி எங்களிடம் வருபவர்களுக்கு நியாமான விலையில் தரமான ரெடிமேட்ஸ் ஆடைகளை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: