×

பெயிட்டி புயல் முன்னெச்சரிக்கை பழவேற்காடு முகாமில் தங்கிய மக்கள் வீடு திரும்பினர்

பொன்னேரி, டிச.18: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரை பகுதியில் சுமார் 13க்கும் மேற்பட்ட கிராமங்கள் அரசுத்துறையின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. வங்கக்கடலில் உருவான பெயிட்டி புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்தது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பழவேற்காடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 3 மீட்டருக்கும் மேல் கடல் அலைகள் எழும்பியதால் கிராமங்களில் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் புகழேந்தி, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் ஆகியோர் கொண்ட குழுவினர் உடனடியாக அப்பகுதிகளுக்கு விரைந்து மீனவ மக்களை வஞ்சிவாக்கம் பேரிடர் மீட்பு பாதுகாப்பு மையத்தில் தங்க வைத்தனர். இந்நிலையில், நேற்று புயல் பழவேற்காடு பகுதியை கடந்து ஆந்திரா சென்றது. இதையடுத்து, முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு காலை உணவு வழங்கி அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : camp ,Pitti Storm Prevention Pulicat ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு