×

செம்பனார்கோவிலில் தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்கள் தேர்வு

செம்பனார்கோவில்,டிச.18: நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆணையராக மாநில முன்னாள் ஓய்வு பிரிவு செயலாளர் ராமலிங்கம், துணை ஆணையராக மாநில முன்னாள் துணை தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலையில் வாக்கெடுப்பு முறையில் பொறுப்பாளர்களை தேர்வு செய்தனர்.  இதில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செம்பனார்கோவில் வட்டாரத் தலைவராக பரசலூர் உதவி நடுநிலைப்பள்ளி தமிழாசிரியர் கோவிந்தராஜ், செயலாளராக குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த கார்த்தி, பொருளாராக மேலப்பாதி இந்து உதவி தொடக்கப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ராஜ் ஆகியோர் பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Chief Ministers ,Tamilnadu Primary School ,
× RELATED ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள...