×

நாகர்கோவிலில் ஆம்னி பஸ் மோதி ஜவுளி வியாபாரி பலி

நாகர்கோவில், டிச.18 : நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (58). இவர் நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆசாரிமார் தெருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன் தினம் இரவு முத்துசாமி, ஒழுகினசேரி பகுதியில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பஸ், முத்துசாமி பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்துசாமியை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு முத்துசாமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags : Omani ,bus mothi textile kills ,Nagercoil ,
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் மழைநீர் வடிகால் இணைக்கப்படுமா?