×

கீழப்பாவூர் கோயில்களில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா

பாவூர்சத்திரம், டிச. 18:  கீழப்பாவூர் கோயில்களில் இன்று (18ம் தேதி) வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 5.45 மணிக்கு ராமநாம பஜனை, 10.30 மணிக்கு உற்சவருக்கு திருமஞ்சனம் தொடந்து அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பும், 5.45 மணிக்கு கோயிலின் வெளிபிரகாரத்தில் (தெப்பக்குளத்தில்) 1008 தீபம் ஏற்றுதல் நடைபெறும். தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் வலம் வருதல் நடக்கிறது.
இதே போல் கீழப்பாவூர் தமிழர் தெரு  ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயில், பஜனைகோவில் தெரு  நவநீதகிருஷ்ணபெருமாள்கோயில்களில்  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை 6 மணிக்கு சுப்ரபாதம், கோபூஜையை தொடர்ந்து 10 மணி வரை சயனசேவை, காலை 11 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு பரமபத வாசல் திறப்பு, சுவாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து பஜனை நடைபெறுகிறது.

Tags : Vaigunda Ekadasi Festival ,temples ,Keezhappuram ,
× RELATED கோயில் அறங்காவலர்கள் நியமனங்களை...