×

ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் பருத்தி செடியில் நோய் தாக்குதல் விவசாயிகள் வேதனை

ராசிபுரம். டிச.16: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் பருத்தி செடியில் மர்மநோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.ராசிபுரம், பட்டணம், புதுப்பாளையம், மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், காக்காவேரி, வேலம்பாளையம், பூசாரிபாளையம், சிங்களாந்தபுரம், கண்ணூர்பட்டி, பாச்சல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள், சுமார் ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் பருத்தி பயிரிட்டுள்ளனர்.பருவமழையை நம்பி பருத்தி பயிட்டுள்ள நிலையில், தற்போது போதிய மழை பெய்யாததால் செடிகளின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. மேலும், பூக்கள் காய் பிடிக்கவும் இல்லை. மாறாக பருத்தி செடியின் இலைகள் கருகியது போல், நிறம் மாறி வருகிறது. இந்த புதிய வகை ேநாய் தாக்குலால், ஒட்டுமொத்த பருத்தி செடிகளும் வீணாகி விடுமோ என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, வேளாண் அதிகாரிகள் உடனடியாக களஆய்வு நடத்தி, நோய் தாக்கிய பருத்தி செடிகளை காப்பாற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cotton swim ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து