×

ராயக்கோட்டை  லட்சுமிநாராயணர் கோயிலில்

18ல் ெசார்க்க வாசல் திறப்பு விழாராயக்கோட்டை,டிச.16: ராயக்கோட்டை  லட்சுமிநாராயணர் சுவாமி கோயிலில் வரும் 18ம் தேதி ெசார்க்க வாசல் திறப்பு விழா சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் பிரசித்திபெற்ற லட்சுமிநாராயணர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாராயணர் லட்சுமி தேவியை இடது மடியின் மீது அமர்த்திகொண்டு அருளாசி வழங்குகிறார், ராயக்கோட்டையின் எட்டு திசைகளிலும் வாயுபுத்திரர்  ஆஞ்சநேயர் ஆலயங்கள் உள்ளன. மலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ராயக்கோட்டை மலையில் கோட்டைகளை கட்டிய விஜயநகர பேரரசு மன்னர் ஜெகதேவராயர் அவரது ராணி ஆஞ்சநேயரை வணங்குவது போல நமக்கு ஆஞ்சநேயர் ஆசி வழங்குகிறார். எட்டு திசைகளிலும் ஆஞ்சநேயர் ஆலயங்கள் உள்ளது ராயக்கோட்டையின் தனிச்சிறப்பாகும்.  லட்சுமிநாராயணர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகதாசியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. வரும் 18ம் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 5.00 மணிக்கு பரமபதவாயில் திறக்கப்பட்டு  லட்சுமிநாராயணர் ஆருளாசி வழங்க உள்ளார். அன்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை விஷ்ணு ஆலய பக்தர்கள் செய்துள்ளனர்.

Tags : Raiakottai  Lakshminarayana temple ,
× RELATED பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு