×

சந்தையில் மாடு விற்பனைக்கு தடை: ரோட்டில் நடந்த பேரம்

உடுமலை, டிச. 16: உடுமலை மாட்டு சந்தையில் மாடுகள் விற்க இம்மாதம் இறுதி வரை தடை உள்ளதால் வியாபாரிகள் ரோடோரம் நின்று மாட்டுகளை விற்றனர். உடுமலை சந்தையில், வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாடு விற்பனை நடக்கும். இங்கு, உடுமலை, மடத்துக்குளம், பழனி சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது, கோமாரி நோய் பீதி காரணமாக மாட்டு சந்தை நடத்த இம்மாதம் இறுதி வரை தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், மாட்டுகளை விற்பதற்காக வியாபாரிகள் மாடுகளுடன் சந்தைக்கு வந்தனர். சந்தைக்கு தடை இருப்பதால் அதிகாரிகள் மாடுகளை சந்தைக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாட்டு வியாபாரிகள் ரோட்டோரம் நின்று மாடுகளை விற்பனை செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டதுடன், பிற சந்தைக்கு வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். மேலும் தடையை மீறி மாடு விற்பனை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED பழநி கிரிவலப் பாதையில் சுற்றுச்சுவர்...