×

நுண்புழு தாக்குதலை தடுக்க சாமந்தி பயிரிடும் விவசாயிகள்

குன்னூர், டிச. 16: விளை நிலங்களில் நுண்புழு தாக்குதலை தடுக்க குன்னூர் விவசாயிகள் நாட்டு சாமந்தி பயிரிட துவங்கி உள்ளனர். குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி என பல்வேறு வகையான மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரடப்பட்டு வருகின்றனர்.  கேரட் விவசாயத்தின் போது மண்ணில் கண்களுக்கு தெரியாத நுண்ணிய வேர் புழுக்கள் தாக்குவதால் பயிர் சேதமடைகிறது. இதற்கு மருந்து இல்லாததால் விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் பயிர்களை புழு தாக்குவதை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் அறுவடை காலங்களில் விளைச்சல் குறைந்தது. நுண்ணிய வேர் புழு தாக்குதலை தடுக்க விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள பந்துமை பகுதியில் விவசாயி ஒருவர் வேர் புழுக்களை கட்டுப்படுத்த விவசாய நிலத்தில் நாட்டு சாமந்தி பயிரிட்டுள்ளார். இது தற்போது பூத்து குலுங்குகிறது. இது குறித்து விவசாயி பெட்டா கூறுகையில், கேரட் பயிரிட்டால் நுண்புழு தாக்குதல் நீடிக்கும். இதை தவிர்க்க நாட்டு சாமந்தி பயிரிட்டு சாகுபடிக்கு பிறகு உழுவதன் மூலம் மண்ணில் உள்ள நுண்ணிய வேர் புழுக்கள் குறைந்து விடும், என்றார். 

Tags : growers ,attack ,
× RELATED பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா...