×

குமரியில் நடந்த வளர்ச்சி திட்டங்களில் ₹2000 ேகாடி ஊழலா? பொன். ராதாகிருஷ்ணன் ஆவேசம்

நாகர்கோவில், டிச.16:  விரும்பி தந்தாலும் ஒரு பைசா கூட வாங்க கூடாது என்ற விரதத்தை கடைபிடித்து வருகிறேன் என்று மத்திய அமைச்சர்  பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 5 மாநில தேர்தல் முடிவுகளால் பா.ஜ.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தேர்தல் முடிவு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என சிலர் கூறி வருகிறார்கள். தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலுமே பா.ஜ.வுக்கு எந்த வீழ்ச்சியும் இல்லாதபோது, தமிழகத்தில் எப்படி வீழ்ச்சியாகும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், தேர்தலுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. இதில் மத்திய அரசை தொடர்புபடுத்தி பேசுவது வேதனையாக உள்ளது.கஜா புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர் வராதது குறித்து, சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,  லட்சக்கணக்கானோர் இறந்தால் தான் பிரதமர் வருவாரா என  கேட்டு இருப்பதாக தகவல் அறிந்தேன். இறந்த வீட்டில் அரசியல் நடத்துவது போல மானங்கெட்ட பிழைப்பு வேறு எதுவும் இல்லை என அமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குமரி மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்களில் ₹2,000 கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கூறியுள்ளார்.

ஏற்கனவே அவருக்கு நான் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். அதற்கு அவர் என்ன பதில் அளிக்கிறார் என்பதை பார்ப்போம். திட்டங்களின் மதிப்பீடுகள் கூட தெரியாமல் ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன்.  ₹2,000 கோடி அல்ல 2 பைசா கூட நான் வாங்கியது இல்லை. விரும்பி தந்தாலும் ஒரு பைசா கூட வாங்கக்கூடாது என்ற விரதத்தை நான் கடைபிடித்து வருகிறேன். இது தொடர்பான எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். குமரி மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு கூட வளர்ச்சி பணிகள் நடக்காமல் இருந்த போது எல்லாம் இவர்கள் எங்கு சென்றார்கள். சென்னையில் முகாமிட்டு இருந்தவர்கள், இப்போது குமரிக்குள் நுழைந்து சாதி மற்றும் மத ரீதியாக பிரச்னையை தூண்டி விட திட்டமிடுகிறார்கள். சென்னை ஐ.ஐ.டி. உணவு விடுதியில் சைவம் மற்றும் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு தனித்தனி இடம் ஒதுக்கீடு செய்தது கண்டிக்கத்தக்கது. எனது கண்டனத்தை ஐஐடி நிர்வாகத்துக்கு தெரிவித்து கொள்கிறேன். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்ததும், அதிமுக மூழ்கும் கப்பல் என கூறியிருக்கிறார். அந்த கப்பலில் தான் அவர் இதுவரை துணை கேப்டனாக இருந்தார் என்பதை மறந்து விட்டு பேசுகிறார். தமிழகத்தில் பா.ஜ.வுக்கு எந்த கட்சியுடனும் மோதலும் இல்லை. விரிசலும் இல்லை.  இலங்கையில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். அங்கு தமிழர்கள் அமைதியுடன் வாழ வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Radhakrishnan ,
× RELATED கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற...