×

கோட்டாறு குமரி மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் ெகாண்டாட்டம்

நாகர்கோவில், டிச.16:  நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ்விழா கொண்டாடப்பட்டது. மாணவி ஜெனித்தா வரவேற்றார். புத்தேரி மருத்துவமனையை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி தாசன் தலைமை வகித்தார். கிறிஸ்து பிறப்பை பற்றிய பல பாடல்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பாடப்பட்டது. தொடர்ந்து கிறிஸ்து பிறப்பை பற்றிய ஒரு குறு நாடகமும் நடத்தப்பட்டது. விழாவில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடினர். கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து மாணவர்களுக்கு வசன போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் சொக்கலிங்கம் விழாவை ஒருங்கிணைத்தார்.

Tags : Kattar Kumari Matriculation School ,
× RELATED தர்கா ஆண்டு விழா