அதிமுக அரசு பாஜவின் கைப்பாவையாக செயல்படுகிறது ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

கண்ணமங்கலம் டிச.16: அதிமுக அரசு பாஜவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.கண்ணமங்கலம் அடுத்த 5 புத்தூர் நடந்த கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் கலந்து கொண்டார்.பின்னர், அவர் கூறியதாவது: ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் காங்கிரஸ் வெற்றிபெற்றதற்கு விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததே காரணம். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி, சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வியடைந்தது.

ஏனென்றால் தெலங்கானாவிற்கும், ஆந்திராவிற்கும் ஏற்கெனவே கருத்து வேறுபாடு உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்தது தவறு என்பது என் தனிப்பட்ட கருத்து. பாஜ தோல்விக்கு காரணம் குறித்து தமிழிசை கூறிய பதில் நகைப்பானது வெற்றியான தோல்வி என்பதற்கு என்ன பொருள். பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்றால் ஏதாவது ஒன்று தான் கூற வேண்டும். அதைவிடுத்து இரண்டும் என்றால் என்ன பொருள். தமிழிசை என்ன பேசுகிறார் என்பதை யாருமே புரிந்துகொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சி கடந்த 2004ம் ஆண்டு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் விவசாய கடன் தள்ளுபடி செய்துள்ளார். நடந்த தேர்தல் தோல்வி, பாஜவிற்கு மரண அடி, அதிமுக அரசு பாஜயின் கைப்பாவையாக செயல்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,government ,interview ,EVMES Ilangovan ,
× RELATED படிப்படியாக மதுவிலக்கை...