×

தமிழகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வருகிறது வனத்துறை தகவல் பரிமாற்றத்துக்கு டிஜிட்டல் வாக்கி டாக்கி அறிக்கை தயாரானதாக அதிகாரிகள் தகவல்

வேலூர், டிச.16:தமிழக வனத்துறையில் தகவல் பரிமாற்றத்துக்கு டிஜிட்டல் வாக்கி டாக்கி வழங்க திட்ட அறிக்கை தயாராகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழக வனத்துறையில் காடு, மலைகளில் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாக்கி டாக்கிகளுக்காக ஆங்காங்கே ரிசீவர்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வனத்துறை வாகனங்களிலும் ரீசிவர்கள் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தபட்சம் 25 மீட்டர் தூரத்துக்கு கூட தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியவில்லை என்று வனத்துறையினர் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான வாக்கி டாக்கிகள் வனத்துறையில் பயன்படுத்தப்படாமல், முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது. இதனால், வனப்பகுதிகளில் விலங்குகள் மற்றும் கடத்தல்காரர்களின் நடமாட்டம் குறித்து தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாமல் வனத்துறையினர் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வனத்துறையினருக்காக டிஜிட்டல் வாக்கி டாக்கிகளை வழங்குவதற்காக அறிக்கை தயாரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வனப்பகுதிகளில் தகவல்களை எளிதில் பரிமாறிக் கொள்ளும் வகையில், டிஜிட்டல் வாக்கி டாக்கிகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக, ஒவ்வொரு அலுவலகத்துக்கும் எத்தனை வாக்கி டாக்கிகள் தேவைப்படுகிறது என்பது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கை தயாரித்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விரைவில் வனத்துறையினருக்கு டிஜிட்டல் வாக்கி டாக்கிகள் வழங்கப்படும். இதன் மூலம் செல்போன்களுக்கு இணையாக தகவல்களை எளிதில் பரிமாறும் வசதிகள் கிடைக்கும்’ என்றனர்.பாக்ஸ்...

ஓரிரு இடங்களில் செயல்படுகிறதுவனத்துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘கடந்த ஆண்டில் வனத்துறை சார்பில், டிஜிட்டல் வாக்கி டாக்கிகள் வழங்க ₹5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோவை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எனவே, முதற்கட்டமாக கோவை உள்ளிட்ட ஓரிரு இடங்களில் உள்ள வனத்துறை அலுவலகங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஜிட்டல் வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டம் சோதனை அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் வனத்துறைக்கு டிஜிட்டல் வாக்கி டாக்கிகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Tags : DKI ,
× RELATED 8 வயது சிறுமியிடம் அத்துமீறிய...