×

கொத்தமங்கலத்தில் அரசு ஜீப்புகள் எரித்த வழக்கு: மேலும் ஒருவர் கைது

ஆலங்குடி, டிச.12: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்குபட்பட்ட பல்வேறு பகுதிகளில் கஜா புயலின் தாக்கதால்  தென்னை, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி கீரமங்கலம் பகுதியில் வேளாண்துறை அதிகாரிகள் சிலர் சேதமடைந்த விபரத்தை சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, அங்கு பொதுமக்கள் சிலர் வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்து தங்களது வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது, அதனையும் கணக்கு எடுக்க கோரிக்கைவிடுத்தனர். இதனால், வேளாண்துறை அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் வேளாண்துறை அதிகாரிகளை சிறைபிடித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் எந்தவிதமாக மீட்பு உள்ளிட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் அப்பகுதியில் அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்த 5 ஜீப்களை தீ வைத்து எரித்தனர். இதனால், அப்பகுதி பெரும் கலவரமானது. இதனைத்தொடர்ந்து, ஆலங்குடி காவல் நிலையத்தில், திருச்சி மண்டல டிஐஜி லலிதாலட்சுமி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அதிரடிப்படை போலீசார் கொத்தமங்கலம் பகுதிக்கு சென்று, சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள கடை வீதிகள் மற்றும் வீடுகளில் இருந்த  சுமார் 62 பேரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து நீதிபதி நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று கீரமங்கலம் போலீசார் கொத்தமங்கலத்தில் 5 அரசு ஜூப்களை எரித்ததாக கொத்தமங்கலம் மேற்கு, கட்டப் பெரியான் தெருவைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் துரை (46) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Kothamangalam ,
× RELATED பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர் கொடுத்த இந்து, கிறிஸ்தவர்கள்