பெரம்பலூர் மாவட்டத்தில் பாஸ்ட் புட் தயாரிப்பு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், டிச.12: பெரம்பலூரில் ஐஓபி சார்பில் இலவசமாக நடத்தப்படும் பாஸ்ட் புட் தயாரிப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்புப் பயிற்சி மைய இயக்குனர் அகல்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெரம்பலூர் சங்குப்பேட்டை, ஷெரீப் காம்ப்ளக்சில் இயங்கிவரும் ஐஓபி கிரா மிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் வரும் 18ம்தேதி முதல் பாஸ்ட் புட் தயாரிப்பு குறித்த பயிற்சிவகுப்பு இலவசமாக அளிக்கப்படவுள்ளது. 10நாட்கள் நடைபெறும் இந்தப்பயிற்சி முடித்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் சங்குப்பேட்டை, மதன கோபாலபுரத்தில் உள்ள ஐஓபிவங்கியின் மாடியிலுள்ள கிராமிய சுயவேலைவாய்ப்புப் பயிற்சிமையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04328-277896 என்றத் தொலைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குநர் அகல்யா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>