×

அதிக பயணிகளை ஏற்றும் ஆட்டோக்களால் விபரீதம்

தேனி, டிச.12: தேனியில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  
 தேனி நகரில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் ஸ்டாண்டுகள் அமைத்து ஓடி வருகின்றன. இது தவிர ஸ்டாண்டுகள் இல்லாமல் சுமார் ஆயிரம் ஆட்டோக்கள் வரை ஓடுகின்றன. தேனியில் இருந்து அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு இத்தகைய ஆட்டோக்களில் பயணிகள் ஏறிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.

 ஆட்டோக்களை பொறுத்தவரை 4 பேர் பயணிக்க மட்டுமே இவ்வகை ஆட்டோக்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகமும் அனுமதி அளித்துள்ளது. ஆனால், தேனியில் ஓடும் பெரும்பாலான ஆட்டோக்களில் 10க்கும் மேற்பட்ட பயணிகள்  ஏற்றிச் செல்லும் அவலநிலை உள்ளது. இந்த அத்துமீறலை போக்குவரத்து போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை. விபத்து ஏற்பட்டு பெரிய அளவில் உயிர்பலி ஏற்பட்டால் மட்டுமே பெயரளவிற்கு செயல்படும் போலீசார், அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : passengers ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி...